சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு நினைவுமுத்திரைகள் வெளியீடு

சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு முதல் நாள் தபால் உறை மற்றும் 10 விசேட நினைவு முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (02) அலரி மாளிகையில் நடைபெற்றது.

1969ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆசிய பசுபிக் தெங்கு குழுமத்தினால் 1998ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 25ஆவது கூட்டத்தின் போது முதல் முறையாக செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி உலக தெங்கு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

தென்னை பயிர்ச்செய்கைக்கான ஆராய்ச்சிக்காக 1929ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலகின் ஒரே நிறுவனம் இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனமாகும்.

இம்முறை தெங்கு தினத்தை முன்னிட்டு இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தினால் முன்மொழியப்பட்டிருந்த பல வேலைத்திட்டங்களை கொவிட்19 தொற்று நிலைமை காரணமாக எதிர்காலத்தில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம், தபால் திணைக்களத்துடன் இணைந்து இவ்வாறு 10 விசேட நினைவு முத்திரைகளை வெளியிடுவது இலங்கை வரலாற்றில் முதல் முறையாகும். தென்னையுடன் தொடர்புடைய பல்வேறு உற்பத்திகள் பத்தினை சித்தரிக்கும் வகையில் இந்நினைவு முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

Fri, 09/03/2021 - 08:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை