சிவில் விவகாரங்கள் எதிலும் இராணுவத்தினர் ஈடுபடவில்லை

ஐ.நா ஆணையாளர் கருத்து குறித்த கேள்விக்கு டளஸ் பதில்

சிவில் விவகாரங்களில் எமது நாட்டு இராணுவம் தேவையில்லாமல் தலையிடவில்லையென்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில சிவில் நடவடிக்கைகளுக்காக இராணுவம் பயன்படுத்தப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட கருத்து குறித்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும கருத்து தெரிவித்தார்.

நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அவசரகால சட்டத்தின் இரண்டு பிரிவுகள் மட்டுமே திருத்தப்பட்டு உணவு விநியோகத்திற்கு இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது . அவர்கள் தடுப்பூசிகள் வழங்குவதில் ஈடுபாடு நேர்மறையானதா இல்லையா? உணவு விநியோகத்திலும் இதுவே உண்மை நிலைமையாகும். நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு, ஆனால் நடைமுறையில் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கான ஒரு குறிகாட்டியாக அதைப் பயன்படுத்தி முடிவுகளை எடுப்போம். இராணுவம் தேவையற்ற தலையீடுகளை தற்போதைய நிலையில் மேற்கொள்ளவில்லை என்பதற்கு நாம் சாட்சி என்றும் அவர் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 09/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை