ஆயுர்வேத சிகிச்சை பெற்ற கொரோனா தொற்றாளர்கள் எவரும் இறக்கவில்லை

அமைச்சர் சிசிர ஜயகொடி

ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்ட எந்தவொரு கொரோனா தொற்று உறுதியான நபர்களும் இதுவரையில் மரணிக்கவில்லையென ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்ட 80 வீதமான கொரோனா தொற்றாளிகளுக்கு பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளளார்.

சிகிச்சை பெற்றுக் கொண்டவர்களில் 299 கொரோனா தொற்று உறுதியானவர்கள் மட்டுமே அதிக நோய்வாய்ப்பட்டு மேற்கத்தைய மருத்துமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ள நேரிட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Thu, 09/02/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை