தென் கொரியாவுடனான உறவை துண்டிப்பதாக வடக்கு எச்சரிக்கை

தென் கொரியாவுடனான இரு தரப்பு உறவை முற்றிலும் முறித்துக் கொள்ளப்போவதாக வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

சில மணி நேர இடைவெளியில் இரு கொரியாக்களும் ஏவுகணைச் சோதனையை நடத்தி முடித்த பின்னர் வட கொரியா அவ்வாறு எச்சரித்துள்ளது.

பியோங்யாங் மீது, தென் கொரியா தொடர்ந்து அவதூறு கூறினால், பதிலடி நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று வட கொரியத் தலைவரின் சகோதரி கிம் யோ ஜோங் எச்சரித்தார்.

தென் கொரியா கடந்த புதன்கிழமை முதன்முறை, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணையைப் பாய்ச்சிச் சோதித்தது.

வட கொரியாவின் தூண்டுதலை தடுக்கும் வகையில் அந்தப் பயிற்சி அமைந்திருப்பதாகத் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் பாராட்டியிருந்தார்.

முன்னதாக, வட கொரியா 2 ஏவுகணைகளைக் கடலில் பாய்ச்சியது.

சீன வெளியுறவு அமைச்சர், வாங் யீ தென் கொரியா சென்றுள்ள வேளையில் வட கொரியா ஏவுகணையைப் பாய்ச்சியுள்ளது. அந்தப் பயணம் குறித்து வட கொரியா மகிழ்ச்சியாக இல்லை என்பதை அது குறிப்பதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.  

இதேவேளை இரயில் ஏவுகணை முறைமை மூலம் வட கொரியா ஏவுகணை சோதனையை மேற்கொண்டிருப்பது குறித்து ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது.

Fri, 09/17/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை