நியூசிலாந்து தாக்குதலுக்கு சர்வமத தலைவர்கள் கண்டனம்

தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வை மதிக்கும் மதத் தலைவர்கள் என்ற ரீதியில், இந்த கொடூரமான பயங்கரவாத செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என சர்வமதத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தில் ஆக்லாந்து நகரத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் சோகமான செய்தியைக் கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வுக்கான இடத்தை நாம் நினைக்கும் போது, எங்களுக்கு மிகுந்த கவலை ஏற்படுகிறது என வன. கலாநிதி அங்ரஹரே கஷ்ஸப நாயக தேரர், சிவ ஸ்ரீ கலாநிதி பாபு சர்மா குருக்கள்,அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி,அருட்தந்தை கலாநிதி சிக்ஸ்டஸ் குருகுலசூரிய கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கும் எங்கள் தாய்நாட்டிற்கும் அனைத்து மனித இனத்திற்கும் அமைதியும் சமாதானமும் என்றென்றும் நிலைத்து நிற்க நாங்கள் இறைவனை பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Mon, 09/06/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை