தலிபான் தலைமைகள் இடையே பெரும் பிளவு

தலிபான்களுக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல்கள் அதன் தலைமைகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெவ்வேறு தலைமைகளுக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தி இருக்கும் தலிபான் பிரிவுகளுக்கு இடையிலான பிளவு அதிகரித்திருப்பதாக களத்தில் இருக்கும் தரப்புகள் மற்றும் முன்னாள் உளவுப்பிரிவினர், இராணுவத்தினரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

‘களத்தில் நிலைமை மோசமடைந்து வருகிறது. தலிபான்கள் மேலும் பிளவுபட்டு ஏற்கனவே தமது பிரிவுகளுக்குள் தனியே சந்திப்புகளை நடத்துகின்றனர்’ என்று காபூலில் இருக்கும் முன்னாள் அரசு தரப்பைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தலிபான்களிடையே ஒருமித்த நிலை இல்லை என்றும் அது வன்முறை தொடர்பான அச்சுறுத்தலை எம்மிடையே ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள சவால்கள் குறிப்பாக ஐ.எஸ் குழுவை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஒவ்வொரு பிரிவுகளும் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Thu, 09/02/2021 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை