மரணத்திலிருந்து 97 சதவீத உயிர்ப் பாதுகாப்பு உறுதி

இந்திய ஆய்வொன்றின் முடிவில் தகவல்

 

கொவிட் வைரஸ் தொற்றக்கூடியது என்றாலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் ஊடாக மரணத்தைத் தடுக்க முடியும் என்று இந்திய ஆய்வொன்று உறுதி செய்துள்ளது.

இந்திய அரசின் கொவிட் தடுப்பு தொழில்நுட்பக் குழு நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கடந்த ஏப்ரல் முதல் ஓகஸ்ட் வரை இந்தியாவில் கொவிட் தொற்று மற்றும் இறப்புகள் பற்றிய தரவை இந்தக்குழு பகுப்பாய்வு செய்துள்ளது.அதனடிப்படையில் முதலாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒருவர் மரணத்திலிருந்து 96 சதவீதம் பாதுகாக்கப்படுகின்றமை தெரியவந்துள்ளது. அதேபோல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட ஒருவர் மரணத்திலிருந்து 97 சதவீதம் பாதுகாக்கப்படுகின்றார்.எனவே, தடுப்பூசியானது கொவிட் வைரஸுக்கு எதிரான மிக முக்கியமான பாதுகாப்பு கவசமாகும் என்று குறித்த ஆய்வுக்குழு அறிவித்துள்ளது.

Sat, 09/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை