வீட்டு தனிமைப்படுத்தலில் 7,534 சிறுவர்களுக்கு சிகிச்சை

விசேட மருத்துவ நிபுணர் மல்காந்தி கல்ஹேன தெரிவிப்பு 

வீடுகளில் தனிமைப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் தற்போது 7534 சிறுவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பொது சுகாதார விசேட மருத்துவர்கள் சங்கத்தின் தலைவி விசேட மருத்துவ நிபுணர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார். 

இச்சிறுவர்கள் 2வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, வீடுகளில் தனிமைப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் 242 கர்ப்பிணித் தாய்மாரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் 77,949  பேர் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)  

லோரன்ஸ் செல்வநாயகம் 

Thu, 09/16/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை