தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 70,000 பேர் கைது

நேற்று 24 மணி நேரத்தில் 94 வாகனங்கள் பறிமுதல்

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக நேற்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும் 737 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 92 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 70,694 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் நேற்று 1,057 வாகனங்களில் பயணித்த 1,705 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது உரிய அனுமதியின்றி மேல் மாகாண எல்லையை கடக்க முயன்ற 193 வாகனங்களில் பயணித்த 306 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Tue, 09/14/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை