பைடன் – ஷி ஜின்பிங் இடையே 7 மாதங்களின் பின் உரையாடல்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ஏழு மாதங்களுக்குப் பின் தொலைபேசி வழி தொடர்பு கொண்டுள்ளனர்.

இருவரும் பரந்த, உத்தியோபூர்வக் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் போட்டி, பூசலில் முடியாமல் இருப்பதை உறுதிசெய்யும் பொறுப்பைப் பற்றி அவர்கள் பேசினர். பைடன் ஜனவரியில் பதவியேற்ற பின்னர், ஷியுடன் நடத்திய இரண்டாவது தொலைபேசி உரையாடல் இதுவாகும்.

இருவருக்கும் இடையே “நேர்மையான மற்றும் ஆழமான” உரையாடல் ஒன்று இடம்பெற்றதாக சீன அரச தொலைக்காட்சியான சி.சி.டி.வி தெரிவித்துள்ளது. “விரிவான மூலோபாய தொடர்பு மற்றும் இரு தரப்பு அவதானத்திற்குரிய விவகாரங்கள்” தொடர்பில் பேசப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடனின் கோரிக்கைக்கு அமையவே இந்த தொலைபேசி அழைப்பு இடம்பெற்றதாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Sat, 09/11/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை