கும்பாபிசேகத்தில் விதி மீறல்; ஆலய குருக்கள் உட்பட 6 பேருக்கு கொவிட் தொற்று

கும்பாபிசேகத்தில் விதி மீறல்; ஆலய குருக்கள் உட்பட 6 பேருக்கு கொவிட் தொற்று-6 Tested Positive Paticipated in Kumbabishekam Omanthai-Vavuniya

- 9 பேருக்கே அனுமதி; 20 பேருக்கு அதிகமானோர் பங்குபற்றல்

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி கும்பாபிசேகம் இடம்பெற்ற நிலையில், சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டவர்களிடம் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் ஆலய குருக்கள் 6 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை, நொச்சிக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் கும்பாவிசேகம் நடத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினரால் சுகாதாரப் பிரிவினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.  தற்போதைய கொவிட் பரவல் நிலையை அடிப்படையாக கொண்டு ஆலய நிர்வாகத்தினர், உபயகாரர் என 9 பேருக்கே சுகாதாரப் பிரிவினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

ஆனால், குறித்த ஆலயத்தில் 20 பேருக்கு மேல் நிற்பதாகவும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து அங்கு சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி ஆலயத்தில் நின்ற 20 பேரிடமும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் ஆலய குருக்கள் உட்பட 6 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், தொற்றாளர்களும், அவர்களுடன் தொடர்புடையவர்களும் சுகாதாரப் பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)

Sun, 09/19/2021 - 11:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை