பாவனைக்குதவாத 6,25,000 Kg சீனி வத்தளையில் மீட்பு

ஒருவர் கைது

பாவனைக்குதவாத 08 கோடி ரூபா பெறுமதியான சீனி மற்றும் திரவ சீனி ஆகியவற்றை பொலிஸ் விசேட செயலணியினர் வத்தளை பகுதியிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

அவற்றுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் விசேட செயலணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட செயலணிக்கு கிடைத்த தகவல்களையடுத்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு  நடவடிக்கைகளின் போதே சீனி மற்றும் பெரல்களில் அடைக்கப்பட்ட திரவ சீனி கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பாவனைக்குதவாத 6,25 ,000 கிலோ சீனி மற்றும் 218 பீப்பாய்களில் அடைக்கப்பட்ட 210 லீட்டர் சீனிப் பாணி ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அப்பொருட்களை கம்பஹா நுகர்வோர் சேவை அதிகார சபையின் விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 09/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை