யாழில் 600 ​ பேர்வரை கலந்துகொண்ட மரண ஊர்வலம்

யாழ். அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற மரணச் சடங்கு ஊர்வலத்தில் சுமார் 600 பேர் கலந்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 2 ஆம் திகதி மின்னல் தாக்கி உயிரிழந்த போக்குவரத்துச் சபை சாரதி ஒருவரின் இறுதி சடங்குக்கு இந் நபர்கள் பங்கேற்றுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த இறுதிச் சடங்கை இந் நபருடன் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் கிராமத்தினர் இணைந்து ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில், இந்த இறுதி சடங்குக்கு சிறுவர்களும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Mon, 09/06/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை