இஸ்ரேல் சிறையில் இருந்து 6 பலஸ்தீனர் தப்பியோட்டம்

இஸ்ரேலின் கடுமையான பாதுகாப்பு கொண்ட சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆறு பலஸ்தீனர்களை பிடிக்க இஸ்ரேல் பாரிய தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளது.

இந்த கைதிகள் தமது சிறைக்கூண்டில் இருந்து கிப்போன் சிறைச்சாலை சுவருக்கு அப்பால் வீதி ஒன்று வரை அழைத்துச் செல்லும் சுரங்கப் பாதை ஒன்றை பல மாதங்களாக தோண்டி இருப்பதாக நம்பப்படுகிறது. தமது பயிர் நிலத்தின் வழியாக இவர்கள் ஓடுவதைப் பார்த்த விவசாயிகளே இது பற்றி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். அல் அக்சா தியாகப் படையின் முன்னாள் தலைவர் ஒருவர் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் ஐந்து உறுப்பினர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த ஆறு பேரில் ஐவர் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலுடன் தொடர்புபட்டு ஆயுள் தண்டனைக்கு உள்ளானவர்கள் என்று இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தை மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை தோல்வி என்று இஸ்ரேல் சிறைச் சேவை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருக்கும் நிலையில் இதனை ஒரு ‘வீரச் செயல்’ என பலஸ்தீன போராட்டக் குழுக்கள் பாராட்டியுள்ளன.

Tue, 09/07/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை