இன்று முதல் நாட்டு நெல் ரூ. 55 இற்கு கொள்வனவு; அரிசி ச.தொ.ச.விற்கு

இன்று முதல் நாட்டு நெல் ரூ. 55 இற்கு கொள்வனவு; அரிசி ச.தொ.ச.விற்கு-8 Cabinet Decisions-Approval to Purchase Nadu Rice Rs 55 Per kg

- களனிப் பாலத்திலிருந்து தூண்களிலான அதிவேக இடைமாறல்
- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 8 தீர்மானங்கள்

2021 சிறுபோக அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் நெல் அறுவடையை போட்டி விலையில் கொள்வனவு செய்யும் நோக்கில் நாடு ஒரு கிலோ 55 ரூபாவுக்கு நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் கொள்வனவு செய்வதற்கும், அவ்வாறு கொள்வனவு செய்யும் நெல்லை அரிசியாக்கி சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

2. புதிய களனிப் பாலத்திலிருந்து இராஜகிரிய ஊடாக வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய இடைமாறல் வரைக்குமான தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலையை அமைத்தல் - நிர்மாணித்தல் மற்றும் பாராமரிப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
இந்நெடுஞ்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தம் திட்டமிட்டு, நிர்மாணித்து, நிதி வழங்கி, நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒப்படைத்தல் எனும் அடிப்படையில் (DBFOT), M/s China Habour Engineering Corporation  இற்கு வழங்குவதற்கு 2021.05.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 03 வருடங்களில் குறித்த அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள நெடுஞ்சாலையின் தரம் மற்றும் குறித்த காலப்பகுதியில் நிர்மாணிப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நிர்மாணித்தல் மற்றும் பராமரிப்பு வேலைகளைக் கண்காணிப்பதற்காக சுயாதீன பொறியியலாளர் ஒருவரைக் கொண்ட ஆலோசனை நிறுவனமொன்று தாபிக்கப்பட வேண்டியுள்ளது. குறித்த ஆலோசனை நிறுவனத்தின் சேவை வழங்குநராக வீதி அபிவிருத்தி அதிகாரசபை செயற்படல் வேண்டும். அதற்கமைய, அதற்கான முறையான பெறுகையைக் கையாண்டு பொருத்தமான நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. மீள்பிறப்பாக்க எரிசக்தி அபிவிருத்தியின் கொள்கை ரீதியான இலக்கை பிரகடனப்படுத்தல்
'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய கொள்கைப் பிரகடனத்திற்கமைய 2030 ஆம் ஆண்டளவில் எமது நாட்டின் மின்சக்தித் தேவையில் அதிகளவு மீள்பிறப்பாக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெற்றுக் கொள்வதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய எமது நாட்டின் ஒட்டுமொத்த மின்சக்தித் தேவையின் 70மூ வீதமானவை 2030 ஆம் ஆண்டளவில் மீள்பிறப்பாக்க எரிசக்தி மூலங்கள் மூலம் பூர்த்தி செய்வதற்கும், 2050 ஆம் ஆண்டாகும் போது எமது நாட்டின் மின்னுற்பத்தியில் முழுமையாக காபன் நீக்கப்பட்ட நிலைமையை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது. குறித்த கொள்கைச் சட்டத்தில் 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க இலங்கை மின்சக்தி சட்டம் மற்றும் குறித்த சட்டத்தின் திருத்தங்களுக்கமைய இலங்கை மின்சார சபையால் 'குறைந்த செலவில் நீண்டகால மின்னுற்பத்தி திட்டம்' தயாரிக்கப்பட வேண்டும். குறித்த மின்னுற்பத்தி திட்டத்தைத் தயாரிப்பதற்காக குறித்த சட்டத்தின் (5) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம் மின்சக்தி அமைச்சர் அவர்கள் பொதுக் கொள்கை வழிகாட்டியொன்று மின்சார சபைக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, குறித்த வழிகாட்டியை வெளியிடுவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. தற்போது அடையாளங் காணப்பட்டதும், ஆனாலும் பாவனைக்குட்படுத்தாத கனிமப் பொருட்களின் பயன்பாட்டுக்கான பொறிமுறையொன்றைத் தயாரித்தல்
எமது நாட்டில் காணப்படுவதும், தற்போது அடையாளங் காணப்பட்டுள்ளதுமான கனிம வளங்களில் பொருளாதாரப் பெறுமதி கொண்ட கனிமங்கள் கீழ்வரும் 04 பிரதான பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  • சக்திவள கனிமங்கள்
  • இரும்பு உலோக மற்றும் கலப்பு உலோகங்கள் கொண்ட கனிமங்கள்
  • இரும்புத்தாது அல்லாத கனிமங்கள்
  • உலோகமல்லாத கனிம வகையைச் சார்ந்த கனிமங்கள்

அவற்றில், இல்மனைற், சர்கோன், ரூடைல் மற்றும் காரியம் போன்ற கனிமப்  பொருட்களை அகழ்தல், சுத்திகரித்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் போன்றன தற்போது கனிம மணல் கம்பனி மற்றும் கஹட்டகஹ கிரஃபயிட் லங்கா லிமிட்டட் போன்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதுடன், தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபை மற்றும் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண ஆராய்ச்சி நிலையம் போன்றன இரத்தினக்கல் மற்றும் தங்காபரணம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. குறித்த கனிமங்கள் தவிர்ந்த ஏனைய கனிமப் பொருட்களின் பாவனை தொடர்பாக அரச தலையீடுகள் போதுமானளவு இடம்பெறுவதில்லை என்பது தெரியவந்துள்ளது. அதனால், குறித்த கனிமப் பொருட்களை முறையான வகையில் பொருளாதார ரீதியில் பயன் பெறுவதற்காக வேலைத்திட்டமொன்றை மேற்கொள்வதற்காக, குறித்த கனிமப் படிமங்கள் காணப்படும் பிரதேசங்கள், குறித்த படிமங்களின் அளவு மற்றும் அவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளக் கூடிய உற்பத்திகள் தொடர்பாக விரிவான ஆய்வுக் கற்கையொன்றை மேற்கொள்வதற்காக துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும், குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. குடியியல் வழக்குக் கோவை 88(2) ஆம் உறுப்புரையை திருத்தம் செய்தல்
பிரதிவாதியின் சிரத்தையின்மையை கருத்தில் கொண்டு அவருக்கு எதிராக நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பொன்று, 14 நாட்களில் குறித்த சிரத்தையின்மைக்கான நியாயமான காரணங்கள் ஏதும் இருந்தமையை முறைப்பாட்டாளருக்கு அறிவித்தலுடன் கூடியதாக நீதிமன்றத்திற்கு பிரதிவாதியால் சமர்ப்பிக்கப்படும் வேண்டுகோளின் அடிப்படையில், நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பை மாற்றிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் குடியியல் வழக்குக் கோவையில் உள்வாங்கப்பட்டுள்ளது. குறித்த ஏற்பாடுகளைப் பயன்படுத்தி பிரதிவாதியொருவருக்கு தாமதப்படுத்தும் தந்திரோபாயத்தைப் பயன்படுத்தவும், முறைப்பாட்டாளரின் நியாயமான உரித்தைக் கொண்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு இயலுமை உள்ளமை கண்காணிக்கப்பட்டுள்ளது. அதனால் குறித்த பாதகமான நிலைமையைத் தவிர்ப்பதற்கு இயலுமான வகையில் குடியியல் வழக்குக் கோவை 88(2) ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக 01.02.2021 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் அரசியலமைப்பு உறுப்புரைகளுக்கு ஏற்புடையதானதென சட்டமா அதிபர் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. குடியியல் வழக்குக் கோவை (101 ஆம் அத்தியாயம்) திருத்தம் செய்தல்
இறுதி விருப்புறுதி ஆவணம் அல்லாத, சான்றுப்படுத்தப்பட்ட ஏதேனுமொரு காணி உறுதி அல்லது ஆவணமொன்றை மேலோட்டமாகப் பார்க்கும் போது அது சரியான வகையில் சான்றுப்படுத்தியுள்ளமை தெரியவந்தால் மற்றும் மேன்முறையீடு செய்யும் போதும் அல்லது தொடர்ந்தும் மேன் முறையீடு செய்யும் போதும் கையொப்பமிடல் அல்லது அதன் போலித்தன்மை குறிப்பாக குற்றப்பகர்வுக்கு உள்ளாக்கப்பட்டு பிரச்சினையாக மேற்கொண்டு வராவிட்டால் அல்லது நீதிமன்றத்திற்கு அவ்வாறான சாட்சிகள் தேவைப்படின் மாத்திரம் அல்லது எழுதி கையொப்பிடல் மற்றும் அவற்றின் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக முறையான சாட்சிகளை முன்னிலைப்படுத்தத் தேவையில்லை எனும் ஏற்பாடுகள் குடியியல் வழக்குக் கோவைக்கு (101 ஆம் அத்தியாயம்) அறிமுகப்படுத்தல் பொருத்தமானதென நீதி அமைச்சர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள குடியியல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான குழு பரிந்துரை செய்துள்ளது. அதற்கமைய, குறித்த பணிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைத் தயாரிப்பதற்காக குடியியல் வழக்குக் கோவைக்கு தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காகவும், அதற்காக சட்ட வரைஞர் அவர்கள் சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. திமோர் - லெஸ்டே (கிழக்குத் திமோர்) அரசுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தல்
திமோர் - லெஸ்டே (கிழக்குத் திமோர்) அரசாங்கம், இலங்கையுடன் இராஜதந்திர தொடர்புகளை முறையான வகையில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான விருப்பத்தை இலங்கைக்கு அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பல தற்போது அந்நாட்டுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. கிழக்குத் திமோருடன் இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் அதேபோல் இராஜதந்திர தளங்களில் இலங்கையின் தலையீடுகளில் அந்நாட்டின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதும் முக்கியமாகும். அதற்கமைய, அந்நாட்டுடன் முறையான இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. மெய்யறிவின் பண்புகளின் ஆற்றல் பற்றிய அளவிடலும் மேம்படுத்தலும்: இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் புதிய அணுகுமுறைகள் தொடர்பான ஆய்வுக் கருத்திட்டம்
மெய்யறிவின் பண்புகளின் ஆற்றல் பற்றிய அளவிடலும் மேம்படுத்தலும் தொடர்பாக இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் புதிய அணுகுமுறைகள் பற்றிய கூட்டு ஆய்வுக் கருத்திட்டத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த ஆய்வுக் கருத்திட்டம் கொழும்பு பல்கலைக்கழகம், பிலிப்பைன்ஸ் டீ லா சால் பல்கலைக்கழகம், கனடா வோர்ட்டலு பல்கலைக்கழகம் ஐக்கிய அமெரிக்க வேக் பொரஸ்ட் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களால் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த ஆய்வுக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அதற்காக குறித்த பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் கல்வி அமைச்சர் சமர்;ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Tue, 09/14/2021 - 12:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை