பள்ளிவாசல் மீது குண்டு வீசிய திருநங்கைக்கு 53 ஆண்டு சிறை

அமெரிக்காவின் மான்ஹட்டன் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது 2017 ஆம் ஆண்டு குண்டு வீசிய குற்றத்திற்காக திருநங்கை ஒருவருக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த திருநங்கை ‘தி வைட் ரப்பிட்ஸ்’ என்ற ஆயுதக் குழு ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.

50 வயதான எமிலி கிளைரா ஹரி என்ற இந்தத் திருநங்கை குண்டு தாக்குதல் நடத்தியது, மத சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது மற்றும் வழிபாட்டாளர்களுக்கு இடையூறு செய்து உட்பட ஐந்து குற்றங்களில் கடந்த ஆண்டு குற்றங்காணப்பட்டார்.

முன்னர் ஓர் ஆணாக இருந்த இந்தத் திருநங்கை பயங்கரவாதக் குழு ஒன்றை ஏற்படுத்தியதாக நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் இரு ஆடவர்கள் மூலம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். புளூம்பேர்க்கில் இருக்கும் தாரல் பாரூக் இஸ்லாமிய நிலையம் என்ற அந்த பள்ளிவாசலில் வழிபாட்டளர்கள் திரண்டிருந்த நேரம், அவர்கள் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே எரிபொருள் மற்றும் குழாய்க் குண்டுகளை வீசி எறிந்துள்ளனர்.

Thu, 09/16/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை