அரசு வழங்க உத்தேசித்துள்ள 5000 ரூபாயை ஏற்க தயாரில்லை

அதனை கொவிட் நிதிக்கு எடுத்துக்கொள்ளுங்கள்

ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரல்

ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வாக அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ள 5000 ரூபா கொடுப்பனவு தங்களுக்கு வேண்டாம் என்றும் அந்தப் பணத்தை கொவிட் நிதிக்கு எடுத்துக்கொள்ளுமாறும் ஆசிரியர்கள் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

அதிபர் ,ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு காரணமாக அரசாங்கம் எதிர்வரும் செப்டம்பர் , ஒக்டோபர் மாதங்களுக்கு 5000 ரூபா வழங்க தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் இதற்கு செலவிடப்படவுள்ள 2360 மில்லியன் ரூபாவை கொரோனா தடுப்பு நிதியத்துக்குப் பயன்படுத்துமாறு அதன் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

5000 ரூபா பணத்திற்காக இந்தப் போராட்டத்தைநிறுத்த முடியாது. நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை ஒரே தடவையில் வழங்க வேண்டும் என்றும் 24 வருட கால உரிமையை நாங்கள் கேட்கிறோம் என மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Thu, 09/02/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை