மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு தடுப்பூசி

உலக நாடுகளிடையே இலங்கை சாதனை

மக்கள் தொகையில் 50% பேருக்கு கொவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்கியிருப்பது நமது நாடென்ற வகையில் எமக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். இந்த வெற்றியில் நாம் அனைவரும் வீரர்கள். எனவே இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்று அமைச்சரவை பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் ,

நாட்டின் மொத்த சனத்தொகையில் 50% க்கும் அதிகமான மக்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கிய நாடாக உலக வரைபடத்திலுள்ள மிக சில நாடுகளிடையே நம் நாடும் இருப்பது அதிர்ஷ்டம். சிறிய தீவான எமது நாட்டை தவிர இந்த நாடுகளில் பிரிட்டன், ஜேர்மன், இத்தாலி, ஸ்பெய்ன், ஜப்பான், மலேசியா போன்ற பெரும்பாலானவை G7 நாடுகளென அமைச்சர் சுட்டிக்காட்டினார் மேலும் அவற்றில் 04 நாடுகள் தடுப்பூசி தயாரிக்கும் நாடுகளாகும்.

இந்த வெற்றியில் அனைவரும் பங்காளிகள் என்றும் சுகாதாரத் துறையில் மகத்தான தியாகம் செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அரச தலைவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் தங்கியிருப்பவர்கள் கூட இந்த வெற்றியில் ஹீரோக்கள் மற்றும் பங்காளிகள் என்றும் அமைச்சர் கூறினார். இந்த வெற்றியில் இந்த ஒற்றுமையுடன் எதிர்வரும் சில வாரங்களை செலவிட்டால் பிரச்சினைகளை சிறப்பாக நிர்வகிக்க முடியுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 09/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை