உலக சந்தைக்கேற்ப விலையை அதிகரிக்காததால் எரிவாயு நிறுவனங்களுக்கு ரூ. 450 மில்லியன் இழப்பு

உலக சந்தையில் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், இரண்டு எரிவாயு நிறுவனங்களும் இலங்கையில் எரிபொருள் விலையை அதிகரிக்கத் தவறியதால் ரூ .450 மில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளன.

இதில் கூடுதலாக லிட்ரோ எரிவாயு நிறுவனமே நட்டமடைந்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு இதுவரை 400 கோடி ரூபா வரை நட்டமேற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

லாப் எரிவாயு நிறுவனத்துக்கு சுமார் 50 கோடி ரூபா வரையில்நட்டமேற்பட்டுள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

மாதமொன்றுக்கு 45,000 மெற்றிக் தொன் முதல் 50,000 மெற்றிக் தொன் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகவும் மேலும் சில காரணமாகவும் உலக சந்தையில் கடந்த காலங்களில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்புக்கேற்ப இலங்கையில் எரிவாயு விலையை அதிகரிக்க லிட்ரோ மற்றும் லாப் நிறுவனங்களால அனுமதி கோரப்பட்ட போதும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிறுவனங்களின் தொடர்ச்சியான கோரிக்கையையடுத்து இரு தரப்புக்கும் பாதிப்பின்றி எதிர்வரும் சில தினங்களில் சமையல் எரிவாயுவின் விலையை ஓரளவு அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tue, 09/21/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை