சீனாவிடம் கோரிய இறுதி 4 மில்லியன் டோஸ் Sinopharm இன்று வந்தடைந்தன

சீனாவிடம் கோரிய இறுதி 4 மில்லியன் டோஸ் Sinopharm இன்று வந்தடைந்தன-Last 4 million Doses of Sinopharm Vaccine-Final Batch in the SPC Contract Arrived in Sri Lanka

- இதுவரை சீனாவிடமிருந்து 26 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள்
- நாட்டின் சனத்தொகையில் அரைவாசியினர் 2 டோஸையும் பெற்றுள்ளனர்

சீனாவிலிருந்து மேலும் 4 மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்கள் இன்று (18) அதிகாலை இலங்கையை வந்தடைந்தன.

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடம் கொள்வனவுக்காக கோரிய கடைசி 4 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளே இவ்வாறு இன்று இலங்கையை வந்தடைந்ததாக, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த பணி சம்பூரணப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ட்விற்றர் கணக்கில் பதிவிட்டுள்ளது.

 

 

அதற்கமைய இலவசமாக 3 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் உள்ளிட்ட சீனாவிடமிருந்து இதுவரை 26 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவிடமிருந்து பெறப்பட்டுள்ள தடுப்பூசி தொகையானது, இலங்கையின் தடுப்பூசி வழங்கல் திட்டத்தில் 80% ஆனவை என, தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நாட்டின் சனத்தொகையில் அரைவாசிப் பேருக்கு (50%), கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக, ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

நேற்றையதினம் (17) இம்மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

  • Sinopharm - 8,973,670
  • Astra Zeneca - 949,105
  • Moderna - 758,282
  • Pfizer - 243,685
  • Sputnik - 43,453

அந்த வகையில் மொத்தமாக 10,968,195 பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


சீனாவிடமிருந்து பெறப்பட்ட Sinopharm தடுப்பூசி டோஸ்கள் - 26 மில்லியன்

இலவசமாக கிடைத்தவை (3 மில்.)
மார்ச் 31 - 600,000 (0.6 மில்.)
மே 25 - 500,000 (0.5 மில்.)
ஜூலை 27 - 1,600,000 (1.6 மில்.)
ஓகஸ்ட் 28 - 0.3 மில்லியன்

கொள்வனவு செய்யப்பட்டவை (23 மில்.)
ஜூன் 06 - ஒரு மில்லியன்
ஜூன் 09 - ஒரு மில்லியன்
ஜூலை 02 - ஒரு மில்லியன்
ஜூலை 04 - ஒரு மில்லியன்
ஜூலை 11 - 2 மில்லியன்
ஜூலை 11 - 2 மில்லியன்
ஓகஸ்ட் 06 - 2.14 மில்லியன்
ஓகஸ்ட் 08 - 1.86 மில்லியன்
ஓகஸ்ட் 24 - 1 மில்லியன்
ஓகஸ்ட் 28 - 2 மில்லியன்
செப்டெம்பர் 04 - 4 மில்லியன்
செப்டெம்பர் 18 - 4 மில்லியன்

நாட்டில் நேற்று (17) வரை வழங்கப்பட்ட தடுப்பூசி விபரங்கள்

Sat, 09/18/2021 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை