அமெரிக்காவின் சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பு; 3.1 மில். பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

இலங்கையில் கொவிட்19 தொற்றுக்கான சிகிச்சைகளை பலப்படுத்தும் முகமாக அமெரிக்காவின் International Medical Health Organization (IMHO) அமைப்பு இலங்கைக்கு 3.1 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் அமெரிக்காவிலுள்ள தமது நண்பர்களுக்கு விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் திரட்டப்பட்ட நிதியிலேயே இந்த மருத்துவ உபரகணங்கள் தனிப்பட்ட ரீதியில் நன்கொடையாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உபகரணங்களை சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் சஞ்ஜீவ முனசிங்கவினால் அதிகாரப்பூர்வமாக பெற்றுக்கொண்டார். உபகரணங்களை சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் வழங்கினார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 
Thu, 09/02/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை