30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் 2 வாரத்தில் தடுப்பூசி வழங்கல் நிறைவு

நாட்டில் 30 வயதிற்கும் மேற்பட்ட ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி நேற்று வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் 30 வயதுக்கு மேற்பட்ட  அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும் என்றும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட ஒரு கோடி மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை பாரிய வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்:

30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும்.

20- இற்கும் 30 ற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களுக்கு ஆறு மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். அதேவேளை நாட்டில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மாருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 09/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை