நெருக்கடியான சூழ்நிலையிலும் 24 வருட கால பிரச்சினைக்கு அரசாங்கம் நியாயமான தீர்வு

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் உணர வேண்டும் என்கிறார் விமல்

அரசாங்கம் என்ற வகையில் இந்த கடினமான மற்றும் சவாலான சூழ்நிலையில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறந்த தீர்வை வழங்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். இந்த தீர்வை ஏற்று மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்க முன்வருமாறு மிகவும் தாழ்மையுடன் சகல அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கோருவதாக அமைச்சர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.  அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு நியமித்த அமைச்சரவை உபகுழு உறுப்பினரான கைத்தொழில்  அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்தார்

அதிபர், ஆசிரியர் 'தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுவது போன்று ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளின் பிரச்சினை 24 ஆண்டுகளாக உள்ளது. ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆசிரியர் சிக்கலை தீர்க்க நாங்கள் உறுதியளித்திருந்தோம். மேலும், அதிபர் - ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளான ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் அதிபர் சேவை ஆகிய மூன்று சேவைகளை இணைத்து ஒரு மூடிய சேவையை அறிமுகப்படுத்த உப குழு உறுப்பினரான முன்னாள் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சவை அனுமதி வழங்கியது.

ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற மூன்று மாத காலப்பகுதியில், மிக ஆபத்தான தொற்றுநோய் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த தொற்றுநோய் சவாலுடன், அரசாங்கத்தின் முன்னுரிமை பட்டியல் மாறத் தொடங்கியது. பிரிவினைவாத பயங்கரவாதத்தின் மீதான போர் தீவிரமடைந்ததால், நாம் அதற்கேற்ப முன்னுரிமை பட்டியலை மாற்றியமைக்க வேண்டியிருந்தது, இந்த நிலையில் தற்பொழுது சுகாதாரப் பிரச்சினை பிரதான பிரச்சினையாக மாறியது. நம் நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்பாராத தாக்கத்தை இது ஏற்படுத்தியது.

இருப்பினும், கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜி. எல். பீரிஸினால் சுபோதினி அறிக்கையின் அடிப்படையில் ஒரு அமைச்சரவை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும், சுபோதினி அறிக்கையின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையால் ஏற்க முடியவில்லை. இது சம்பள உயர்வு தொடர்பாக சம்பள நிர்ணய ஆணையத்தால் நிராகரிக்கப்பட்ட பரிந்துரைகளை உள்ளடக்கிய ஒரு அறிக்கையாகும்.

இந்த நிலையிலே உகந்த தீர்வு முன்வைக்க அமைச்சரவை உப குழு நியமிக்கபட்டது.

பல்வேறு தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி பல தடவைகள் கூடி உபகுழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

நாம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பல முடிவுகளை எடுத்தது. அதில் முதலாவது 'அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு கொள்கை அடிப்படையில் உடன்பாடு காணப்பட்டது. இரண்டாவது, 'ஆசிரியர்கள் சேவை, அதிபர் சேவை மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் சேவைகளை 2021 நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் மூடிய சேவையாக வர்த்தமானி ஊடாக வெளியிட வேண்டும்'. இந்த மூன்று சேவைகளையும் ஒரு சேவையில் இணைக்கும் போது, ஒரு புதிய சேவை யாப்பு தயாரிக்க வேண்டும்.

 

ஷம்ஸ் பாஹிம்

Thu, 09/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை