பொலிவியாவில் பஸ் பள்ளத்தில் விழுந்த விபத்தில் 23 பேர் பலி

மத்திய பொலிவியாவில் மலை ஒன்றில் இருந்து பஸ் வண்டி ஒன்று பள்ளத்தில் விழுந்த விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

33 பயணிகளுடன் சென்றிருக்கும் அந்த பஸ் வண்டி கடந்த திங்கட்கிழமை காலை கொசபம்பா மாநிலத்தில் மலை ஒன்றில் இருந்து 400 மீற்றர் ஆழத்திற்கு சரிந்துள்ளது.

‘நான் பிரேக்கை மித்தேன். ஆனால் பிரேக் பிடிபடவில்லை’ என்று காயத்திற்கு உள்ளான ஓட்டுநர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் அவரது மனைவி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் ஒன்று, இரண்டு மற்றும் ஆறு வயதுடைய மூன்று சிறுவர்கள் உள்ளனர் என்று பேஸ்புக்கில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். இறுக்கமான வளைவைக் கொண்ட இந்த பகுதியில் விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக உள்ளூர் வானொலி ஒன்று குறிப்பிட்டுள்ளது. விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிக மோசமான வீதிப் பாதுகாப்பு உடைய நாடாக பொலிவியா உள்ளது. இங்கு கடந்த ஓர் ஆண்டுக்குள் பலர் கொல்லப்பட்ட பஸ் விபத்துகள் இடம்பெறுவது இது மூன்றாவது முறையாகும்.

கடந்த மார்ச் 20 ஆம் திகதி இதேபோன்ற ஒரு விபத்தில் 20 பேர் கொல்லப்பட்டதோடு கடந்த ஆண்டு செப்டெம்பரில் இடம்பெற்ற மற்றொரு விபத்தில் 19 பேர் பலியாகினர்.

Wed, 09/08/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை