பெரும் கடன் சுமையில் நாடு 2029வரை நெருக்கடி தொடரும்

இறுக்கமான ஆட்சியை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம்

கடன் நெருக்கடிக்கும் வெளிநாட்டு கையிருப்பு இல்லாமல் போனமைக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவோ எமது அரசாங்கமோ காரணமல்ல. கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தவறான வெளிநாட்டு கொள்கையும் அனர்த்தங்கள், கொவிட்19 நெருக்கடிகளே காரணமென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

நாடு மிகப்பெரிய வெளிநாட்டு செலாவணி நெருக்கடி நிலைமைக்கு முகம்கொடுத்து வருகின்றது. இது வெறுமனே கொவிட் -19 வைரஸ் பரவல் காரணங்களின் தாக்கமாக மட்டும் கூறிவிட முடியாது. கடந்த 1977 ஆம் ஆண்டிலிருந்து கையாண்ட திறந்த பொருளாதார கொள்கையின் தாக்கமும், அதன் பின்னரான தேசிய உற்பத்தி மீதான குறைந்த நம்பிக்கையும், உற்பத்திகளை குறைத்து இறக்குமதியை மட்டுமே நம்பியமையும் இப்போதைய நெருக்கடி உருவாக காரணமாக அமைந்தது.

அதேபோல் தாக்கு பிடிக்க முடியாதளவுக்கு அபிவிருத்தி கடன்களை பெற்றுள்ளோம். 2029ஆம் ஆண்டு வரையில் இந்த நெருக்கடிக்கு நாம் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.வெளிநாட்டு கையிருப்பு இல்லாமல் போனமைக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் இதற்கு கோட்டாபய ராஜபக்க்ஷவோ எமது அரசாங்கமோ காரணமல்ல.

கடந்த கால தவறான வெளிநாட்டு கொள்கை, மற்றும் அனர்த்தங்கள், கொவிட்19 நெருகடிகளே காரணம். இதன் காரணமாகவே எம்மால் இவ்வாறான இறுக்கமான ஆட்சியை கொண்டு செல்ல வேண்டியுள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 09/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை