மேல் மாகாணம், காலியில் 20 - 29 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி; நாளை ஆரம்பம்

மேல் மாகாணம், காலியில் 20 - 29 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு; தடுப்பூசி நாளை ஆரம்பம்-Vaccination of Age 20-29 Begins in Western Province & Galle-September 06

- குறித்த மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் அனுமதி

மேல் மாகாணம் மற்றும் காலி மாவட்டத்தில், 20 - 29 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை  நாளை (06) ஆரம்பிக்கப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி மாவட்டங்களில் தற்போது கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அது தவிர, இராணுவத்தால் நடாத்தப்படும் விஹார மகாதேவி, தியத உயன, பனாகொட இராணுவ முகாம், வேரஹெர இராணுவ வைத்திய படையணி தலைமையகம் உள்ளிட்ட மையங்களிலும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

குறித்த மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் தடுப்பூசி செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தங்களது அடையாளத்தையும், வசிப்பிடத்தையும் உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் தடுப்பூசி மையங்களுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 09/05/2021 - 16:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை