1,800 தொன் சீனியை பதுக்கிய களஞ்சியசாலைக்கு சீல்!

நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிரடி

 

சுமார் 1,800 மெற்றிக் தொன் சீனியை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த பேலியகொடை நுகே வீதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்று நேற்று நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சுற்றிவளைப்பட்டது.  இந்த நிறுவனம் அரசின் கீழ் பதிவை பெற்றுள்ள போதிலும், சட்டவிரோதமாக சீனியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததன் காரணமாக களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் களஞ்சியசாலையினுள் சட்டவிரோதமாக சுமார் 1,800 மெற்றிக் தொன் சீனி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக, நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட சீனியை சதொசவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

Thu, 09/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை