18 - 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி சிறந்தது

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு

சைனோபார்ம்   தடுப்பூசியானது  18 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு   வழங்குவது சிறந்ததாகுமென்று  தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்   12 தொடக்கம் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு  பைஸர்  தடுப்பூசி சிறந்ததென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சருடனான சந்திப்பின் போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த விடயங்களை முன்வைத்துள்ளது. இந்த சந்திப்பு புதன்கிழமை(08) நடைபெற்றதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சைனோபார்ம் தடுப்பூசி போதிய அளவில் கையிருப்பில் காணப்படுவதனால் இதனை பாடசாலை மாணவர்களுக்கும் ஏற்ற முடியுமென்று சங்கம் அறிவித்துள்ளது. 

நாட்டில் இதுவரை ஒரு கோடி 04 லட்சம் பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. என்பத்துடன் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு சைனோபார்ம் இரு டோஸ்களும்  ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Sat, 09/11/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை