இன்று நாட்டின் 14 மாவட்டங்களில் 143 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

- மேலும் 73,000 Pfizer டோஸ்கள் வந்தடைந்தன

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (20) நாடு முழுவதும் 14 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 143 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதேவேளை, அமெரிக்க தயாரிப்பான Pfizer தடுப்பூசியின் 73,000 டோஸ்கள் இன்று (20) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது.

சுமார் 445 கி.கி. எடை கொண்ட இந்த தடுப்பூசி தொகையானது, நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் நகரிலிருந்து, கட்டாரின் டோஹா நகருக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கட்டார் விமான சேவை சரக்கு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது.

இவை, அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டல் களஞ்சியத்திற்கு அனுப்பப்படவுள்ளன.

நேற்று (19) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (20) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

Mon, 09/20/2021 - 09:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை