ஹப்புத்தளையில் குளவிக் கொட்டு 13 தொழிலாளர் ஆஸ்பத்திரியில்

கொட்டகலை டிரேட்டன் தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்துகொண்டிருந்த தொழிலாளர்களை நேற்று (29) குளவிகள் கொட்டியதினால் 13 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கு இலக்காகினர்.

அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றிலிருந்து கலைந்து வந்த குளவிகள் இவ்வாறு தொழிலாளர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரில் 2 ஆண்களும், 11 பெண்களும் அடங்குகின்றனர்.

 

ஹற்றன் சுழற்சி நிருபர்

Thu, 09/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை