1,300 கிலோ மஞ்சள் யாழ். பாசையூரில் மீட்பு

புலனாய்வு தகவலையடுத்து பொலிஸார் அதிரடி

 

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 1,300 கிலோ மஞ்சள் பொதிகளை யாழ். மாவட்டத்தின் பாசையூர் பகுதியில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவிலிருந்து பாசையூர் பகுதிக்கு படகில் மஞ்சள்  கடத்தி வரப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றிலிருந்து மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட மஞ்சளை சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 

யாழ். விசேட நிருபர்

Thu, 09/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை