இலங்கையில் ஊரடங்கு செப்டெம்பர் 13 வரை மேலும் 7 நாட்கள் நீடிப்பு

தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 13ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

இன்று (03) முற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொவிட்-19 ஜனாதிபதி செயலணி கூட்டத்தை தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், தடுப்பூசி செலுத்துவதில் மேலும் முன்னேற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இக்காலப் பகுதியில் தடுப்பூசி செலுத்தாதோர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, எப்போதும் முகக்கசவசத்தை அணியுமாறும், வீட்டிலேயே தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

Fri, 09/03/2021 - 12:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை