அடுத்த இரு மாதங்களுக்குள் 12 மில். தடுப்பூசிகள் இறக்குமதி

டாக்டர் பிரசன்ன குணசேன தகவல்

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மொத்தம் 12 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென எதிபார்க்கப்படுகிறது. அதன்படி 08 மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசியும், 04 மில்லியன் டோஸ் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியும் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டாக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ தரவுகளின்படி இலங்கை இதுவரை 23 மில்லியனுக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசி அளவுகளைப் பெற்றுள்ளது. நாட்டில் இதுவரை 20.6 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி அளவுகள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றில் 8.1 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 

Fri, 09/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை