இன்று நாட்டின் 12 மாவட்டங்களில் 133 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 12 மாவட்டங்களில் 133 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-133 Vaccination Centers Operating in 12-Districts-Sep-19

- கண்டியில் 2ஆம் டோஸாக வழங்க மேலும் 120,000 Sputnik V டோஸ்கள்

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (19) நாடு முழுவதும் 12 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 133 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதேவேளை, ரஷ்ய தயாரிப்பான Sputnik V தடுப்பூசியின் 120,000 டோஸ்கள் இன்று (19) அதிகாலை இலங்கையை வந்தடைந்ததாக, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இவை கண்டி மாவட்டத்தில் ஏற்கனவே முதலாவது டோஸாக வழங்கப்பட்டவர்களுக்கு, நாளை மறுநாள் (21) முதல் இரண்டாவது டோஸாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று (18) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (19) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

Sun, 09/19/2021 - 08:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை