காணாமல் போன 11 இலட்சம் தரவுகள்

உண்மையை வெளிப்படுத்த கோரல்

பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பில் முன்னணிக் கடமைகளை நிறைவேற்றுகின்ற தேசிய ஒளதடங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுகள் காணாமல் போயுள்ளமை பாரதூரமான நிலைமையை உருவாக்குவதற்குக் காரணமாக அமையலாமென எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சுகாதார பாதுகாப்பு மற்றும் தடுப்பூசிகள், மருந்துகள் இறக்குமதிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள தீர்மானமிக்க இக்காலப்பகுதியில்,தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்குரிய மிக முக்கியமான சுமார் 11 இலட்சம் தரவுக் கோவைகள் காணாமல் போனமை பாரதூரமான ஒரு விடயமாகும். ஒரு தனியார் நிறுவனத்தின் கணினி இயக்குநரின் கையால் ஏற்பட்ட தவறு எனத் தெரிவித்து அதனை மலினப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் பாதுகாப்பு கடுமையான அவதானமிக்க நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அனுமதியை வழங்கியுள்ளமை, மருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கியுள்ளமை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருத்தி விசாரணைகள் நடைபெற வேண்டும்.

தேசிய ஓதடங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுகள் காணாமல் போயுள்ளமை ஒரு சதித்திட்டமென உதவி சொலிஸிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.

மருந்து மாபியாக்களால் திட்டமிட்டு இந்த சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளதையடுத்து இதுகுறித்து அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ள விடயங்களை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றார்

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 09/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை