ஒட்சிசன் வசதிகளுடன் 11,000 கட்டில்கள்; கொரோனா நோயாளர்களுக்காக 191 ஆஸ்பத்திரிகளில் நிறுவ நடவடிக்கை

அரசாங்க வைத்தியசாலைகளில் 11,000 கட்டில்களுக்கு ஒட்சிசன் உள்ளிட்ட ஏனைய வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

300 கோடி ரூபா செலவில் மேற்படி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் 191 அரசாங்க வைத்தியசாலைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்படி வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களை தீவிர சிகிச்சை பிரிவுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லாத வகையில் சாதாரண வார்ட்டுகளில் ஒட்சிசன் உள்ளிட்ட சகல வசதிகளுடன் கட்டில்கள் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இதற்காக தயார்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Thu, 09/09/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை