இலங்கை தமிழரசுக் கட்சியின் VVT நகரசபை தலைவர் கொரோனாவுக்கு பலி

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா (வயது 76) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை முதல் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு பொதுச் சுகாதார பரிசோதகரினால் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 நோய்த் தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதனை அடுத்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதேவேளை, கடந்த 31ஆம் திகதி நகர சபைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்த போதும் தமிழ் அரசுக் கட்சியினால் அதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

யாழ்.விசேட நிருபர்

Thu, 08/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை