ஒரு மாத சம்பள பணம் வழங்கினார் அங்கஜன் MP

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவும் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் வாழ்வாதார

கொடுப்பனவுக்காகவும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஒருமாத சம்பளத்தை கொவிட்19 நிதியத்துக்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கொவிட்19 நிதியத்துக்கான எனது

பங்களிப்பு மனதிற்கு நிம்மதியையும் ,புது உத்வேகத்தையும் அளிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் தொடந்தும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது நாடு பல சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றது. அதில் ஓர் அங்கமாக பொருளாதார பிரச்சினை காணப்படுகிறது.

இந் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இணைய வழியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் எமது ஒருமாத சம்பளத்தை கொவிட்19 நிதியத்துக்கு வழங்க ஏகமனதாக தீர்மானித்திருந்தோம். இக்கட்டான தருணத்தில் ஒருவருக்கு செய்யும் உதவி எமது மனதிற்கு புத்துணர்ச்சியையும்,புது உத்வேகத்தையும் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tue, 08/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை