மலேசியாவில் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு கட்டுப்பாடு தளர்வு

மலேசியா, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்குச் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தவுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை முதல், அந்தப் புதிய விதிமுறைகள் நடப்புக்கு வரவுள்ளன.

கிள்ளான் பள்ளத்தாக்கில் வைரஸ் பரவல் மோசமடைந்துள்ளதால் புதிய விதிகள் அங்கு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட, வெளிநாட்டிலிருந்து திரும்பும் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் வெளி மாநிலங்களுக்குச் செல்ல விதிமுறைகள் அனுமதிக்கும். வெவ்வேறு இடங்களில் உள்ள திருமணமான தம்பதிகளுக்கும் பெற்றோருக்கும் அது பொருந்தும்.

முழுமையாகத் தடுப்பூசி போட்ட குடியிருப்பாளர்கள் உணவகங்களில் அமர்ந்து உண்ணலாம்; சமய வழிபாடுகளில் கலந்துகொள்ளலாம். சமூக இடைவெளியோடு வெளிப்புற உடற்பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

புதிய திட்டம், தரவு மற்றும் அறிவியலை அடிப்படையாகக்கொண்டு கவனமாக உருவாக்கப்பட்டது என்று பிரதமர் முஹிதீன் யாசின் கூறினார். அனைவரும் வழக்கநிலைக்குத் திரும்ப அது வகைசெய்யும் என்றார் அவர். இதற்கிடையே, மலேசியாவில் புதிதாக 18,000க்கும் அதிகமானோரிடம் வைரஸ் தொற்று உறுதியானது. பெரும்பாலானோர் சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள். அந்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1.2 மில்லியனாக உயர்ந்துள்ளது.

 

Tue, 08/10/2021 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை