குமுதினியை போன்றதொரு நவீன படகு சேவையை நெடுந்தீவு மக்களுக்கு பெற்றுத்தர அமைச்சர் டக்ளஸ் உறுதி!

எந்த சூழ்நிலையிலும் நெடுந்தீவின் கடற்பரப்பில் மக்களுக்கான போக்குவரத்து பணியை முன்னெடுக்கும் ஆற்றல் கொண்ட குமுதினி படகைப்போன்ற மற்றுமொரு படகை கட்டுமாணம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவதாக தெரிவித்துள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழல் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தற்போது பழுதடைந்த நிலையில் சேவையை முன்னெடுக்க முடியாது தரித்து நிற்கும் குமுதினி படகையும் மீள் திருத்தம் செய்து விரையில் சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

நெடுந்தீவு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக்’ கட்சியின் முக்கியஸ்தர்கள் குறித்த பிரதேசத்தின் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தனர். 

இதன்போது நெடுந்தீவுக்கான போக்குவரத்து பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தருமாறு குறித்த பிரதேச மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களால் அமைச்ர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தொலைபேசியூடாக தெரியப்படுத்தப்பட்டது. 

இந்த மக்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடியபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்திருந்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –  

நெடுந்தீவு குறிகாட்டுவான் கடற்பரப்புக்கு ஏற்ற ஏதுநிலைகளுடன் கூடியதும் குமுதினி படகை ஒத்ததுமான மற்றொரு படகினை கட்டுமாணம் செய்வதன் மூலமாக இப்பகுதியின் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பது எனது விருப்பம். இதை இப்பிரதேசத்தின் முன்னாள் தவிசாளர் அமரர் அரியநாயகமும் என்னிடம் பலமுறை வலியுறுத்தியிருந்தார். அந்தவகையில் விரைவில் துறைசார் தரப்பினருடன் பேசி குமுதினி படகை ஒத்ததான நவீன வசதிகளுடன் கூடிய படகொன்றை கட்டுமாணம் செய்து தருவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன்.. 

அதேநேரம் தற்போது பழுதடைந்துள்ள குமுதினி படகை துரிதகதியில் முழுமையாக திருத்தியமைத்து சேவையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் துறைசார் தரப்பினருக்கும் பணித்துள்ளேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  

Fri, 08/06/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை