சீன வீதித் திட்டத்திற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு

பாகிஸ்தானில் க்வாதர் பிராந்தியத்தில் சீனாவின் பல பில்லியன் டொலர் வீதித் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. அங்கு நீர், மின்சாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பலொகிஸ்தானின் கரையோர நகர் ஒன்றில் மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் ஏனைய உள்ளூர் தொழிலாளர்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நீர் மற்றும் மின்சாராத்தைக் கோரியும் அந்த நீர்ப்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் இழுவைப் படகுகளை நிறுத்தும்படியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை நிர்வாகம் கலைக்க முயன்றதில் இருவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் சீன ஆதரவு பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு க்வாதர் துறைமுகத்தை குறைந்தது 40 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் குத்தகைக்கு விட்டுள்ளது.

Wed, 08/25/2021 - 10:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை