விமானத்தில் இருந்து வீழ்ந்தவர் ஆப்கான் தேசிய கால்பந்து வீரர்!

காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவா் ஆப்கானிஸ்தான் தேசிய கால்பந்து அணி வீரர் என்பது தெரியவந்துள்ளது.

ஆப்கானை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, அதிகமானோர் அந்நாட்டிலிருந்து வெளியேற முயன்று வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை காபூல் விமான நிலையத்தில் அதிகமானவர்கள் திரண்டனா். அவா்களில் சிலா் அங்கிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தின் இறக்கைப் பகுதியிலும், டயர் பகுதியிலும் ஏறி அமா்ந்துகொண்டனர்.

விமானம் பறக்க ஆரம்பித்ததும் அதிலிருந்து மூவா் தரையில் விழுந்து உயிரிழந்தனர். அவா்களில் ஒருவா் ஆப்கன் தேசிய கால்பந்து கனிஷ்ட அணியைச் சேர்ந்த ஜாகி அன்வாரி (19) என்பது தெரியவந்துள்ளது. இத்தகவலை அந்நாட்டின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

காபுல் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சி-17 விமானத்தில் இருந்து இருவர் விழும் காட்சிகள் சமூக ஊடகத்தில் வெளியான வீடியோ பதிவில் காண முடிகிறது.

விமானத்தின் டயர் பகுதியிலும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்கா பின்னர் உறுதி செய்ததோடு இது தொடர்பில் விசாரணைக்கு பென்டகன் உத்தரவிட்டுள்ளது.

Sat, 08/21/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை