இரண்டாவது டோஸுக்கு போதுமான அஸ்ட்ரா செனெகா கையிருப்பில்

அனைவருக்கும் கிடைக்கும் என்கிறார் Dr.ஹேமந்த ஹேரத்

 

அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற அனைவருக்கும் இரண்டாவது டோஸை வழங்க போதுமான அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை நிர்வகிப்பதற்காக நிறுவப்பட்ட தடுப்பூசி மையங்கள் பற்றிய தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட சுகாதார மருத்துவ அலுவலர் (MOH) துறைகளை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் ஏற்பட்ட உள்ளூர் தேவையின் நிமிர்த்தம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆகையால் இலங்கையில் அத்தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவியது.

அதனை தொடர்ந்து, தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் ஏனைய நாடுகளிலுள்ள பல்வேறு தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தது. சனிக்கிழமையன்று அஸ்ட்ரா செனேகா தடுப்பூசியின் 728,460 டோஸ்கள் ஜப்பானில் இருந்து நாட்டை வந்தடைந்தன. இதற்கமைய நேற்று முன்தினம் முதல் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசியின் இரண்டாம் டோஸை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்​டன என அவர் மேலும் தெரிவித்தார்.

 

Tue, 08/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை