சிரேஷ்ட நிர்வாகி எம்.என். ஜுனைட் காலமானார்

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட நிர்வாகியும் பல அமைச்சுகளில் செயலாளராகக் கடமையாற்றியவரும், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான எம்.என். ஜுனைட் (வயது 78) நேற்று முன்தினம் காலமானார். அன்னாரின் ஜனாஸா கொழும்பு, ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் நேற்றுமுன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவர் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் நிர்வாக மறுசீரமைப்பு அமைச்சு, உள்விவகார மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு, துறைமுகங்கள் கப்பல்துறை, புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு ஆகிய அமைச்சுக்களில் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார். அத்துடன் 2005,- 2008 வரையான காலப்பகுதியில் இவர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றினார்.

1942 டிசம்பர் 18 ஆம் திகதி திக்வெல்லவில் பிறந்த இவர் ஹம்பாந்தோட்டை சென் மேரிஸ் கல்லூரியில் சிங்கள மொழியில் கற்றுத் தேர்ந்தவராவார். ஆனாலும் தாய் மொழியான தமிழிலும் நல்ல பரீட்சயம் மிக்கவராக விளங்கினார்.

Thu, 08/19/2021 - 08:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை