சீன பொருளாதார வளர்ச்சியில் சரிவு; வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் சமிக்ஞை

சீனாவில் மீண்டும் கொவிட் பெருந்தொற்று பரவி வருவதையடுத்து அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்பு வோல்ஸ்ட்ரீட் வங்கிகளின் மதிப்பீடுகளில் சீனாவுக்கு சரிவை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வார இறுதியில் வெளியான சீன வர்த்தக தரவுகளில் காணப்பட்ட மதிப்பீட்டைவிட அந்நாட்டின் தொழிற்சாலைப் பிரிவில் அதிக பணவீக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இப்பொருளாதார சரிவையடுத்து வோல்ஸ்ட்ரீட் வங்கிகளான கோல்ட்மேன் செக்ஸ், ஜேபி மோர்கன் மற்றும் மோர்கன் ஸ்டான்லி என்பன தமது சீனா தொடர்பான பொருளாதார எதிர்வுகூறல் கணிப்பீடுகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. ஜேபி மோர்கன் வங்கி, தன் சீனா தொடர்பான காலாண்டு மதிப்பீட்டில் இறுதி மூன்று மாதங்களை 4.3 சதவீத முன்னைய மதிப்பீட்டை 2.0 சதவீதமாக மாற்றியுள்ளது. இவ்வருடத்துக்கான முழு மதிப்பீடான 9.1 சதவீத வளர்ச்சியை 9.8 சதவீதமாக மாற்றி அமைத்துள்ளது. இது போலவே மோர்கன் ஸ்டான்லி வங்கி தன் காலாண்டு மதிப்பீட்டை 1.6 சத வீதமாகவும் கோல்ட்மேன் வங்கி தன் 5.8 சத மதீப்பீட்டை 2.3 சத வீதமாகவும் மதிப்பீடு செய்துள்ளது. தமது மறு மதிப்பீடு தொடர்பாக சீன அதிகாரிகள் தமக்கு சாதகமாக சமிக்ஞைகளை வெளிப்படுத்துவர் என எதிர்பார்ப்பதாக ஜேபி மோர்கன் மற்றும் மோர்கள் ஸ்டான்லி வங்கிகள் தெரிவித்துள்ளன.

உற்பத்திப் பொருட்களுக்கு உள்ளூரில் தேவை குறைந்திருப்பதும் டெல்டா தொற்றும், உலகளாவிய கொரோனா தொற்றின் விளைவால் ஏற்றுமதியில் ஏற்பட்டிருக்கும் சரிவும் அடுத்துவரும் மாதங்களிலும் வீழ்ச்சியையே காட்டும் என வங்கிகள் தெரிவித்துள்ளனர்.

Fri, 08/13/2021 - 14:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை