'டெல்டா' குறித்து அரசு அதிக கவனமெடுக்க வேண்டும்

பாராளுமன்றத்தில் ரணில் எம்.பி. கோரல்

டெல்டா திரிபு உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசிகளாலும் இதனை கட்டுப்படுத்துவது கடினமாகவுள்ளதால் இது குறித்து அரசாங்கம் அதி கூடிய கவனத்தை செலுத்த வேண்டுமென்பதுடன் விசேட அமைச்சரவைக் குழுவொன்றை அமைத்து உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். இராணுவத் தளபதியின் செலணியை நம்பிக்கொண்டிருந்தால் உயிரிழப்புகள்தான் அதிகமாகுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

டெல்டா திரிபு தற்போதுதான் ஆரம்பமாகியுள்ளது. இது எவ்வாறு பரவலடையுமென எமக்குத் தெரியாது. தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள திரிபு பரவுவதை நாம் கட்டாயம் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும்.

வைத்தியசாலைகளில் மக்கள் படுத்திருப்பதை பார்க்க வேண்டும். இராணுவத்திடம் வைத்தியசாலைகள் உள்ளன. பல இடங்கள் உள்ளன. தகரங்கள் மற்றும் தென்னை மட்டைகளை கொண்டாவது அவற்றை அவசர நிலையங்களாக மாற்ற முடியும். வைத்தியசாலைகள் அமைந்திருக்கும் இடங்களில்தான் இவற்றை செய்யுமாறு கோருகிறோம். இராணுவத்தினர் மற்றும் பொறியியலாளர்களை கொண்டு இவற்றைஅமைக்க முடியும்.

அதற்கான உதவிகளை எம்மால் வழங்க முடியும்.

கொவிட்19 ஒழிப்புக்கான செயலணி இருக்கும்வரை எம்மால் பார்த்துக்கொண்டுதான் இருக்க முடியும். மக்கள் இறக்கின்றனர்.

அமைச்சரவையில் விசேட குழுவொன்றை அமைக்க வேண்டும்.

பாராளுமன்றத்துக்கு கொண்டுவாருங்கள். சுகாதார அமைச்சரின் ஆலோசனை குழுவுக்கு நாமும் ஆலோசனைகளை வழங்குகிறோம்.

இல்லாவிட்டால் டெல்டா திரிபு பரவல் அடைவதை கட்டுப்படுத்த முடியாது போய்விடும்.

இதுவொரு தேசிய பிரச்சினை. இதனை அரசியலாக்கும் நோக்கம் எமக்கு இல்லை என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

Fri, 08/06/2021 - 09:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை