ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை தடுத்தவர்களை வெளிப்படுத்துங்கள்

IGPயிடம் ஐக்கிய மக்கள் சக்தி சவால்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு தடையாக இருந்தவர்களின் விபரங்களை வெளிப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி பொலிஸ்மா அதிபரிடம் சவால் விடுத்துள்ளது.

தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக இவ்வாரம் பொலிஸ்மா அதிபர் தெரிவித்த கருத்து குறித்து நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா இவ்வாறு கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

Sat, 08/28/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை