தமிழக முதல்வருக்கு தனது நன்றியை தெரிவித்த செந்தில்

தொலைபேசியில் உரையாடி வாழ்த்தினார்

இலங்கை தமிழர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலான அறிவிப்புகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்  உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியூடாக தொடர்புகொண்ட செந்தில் தொண்டமான் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.

‘தமிழகத்தில் மறுவாழ்வு மையங்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடு குடியிருப்புகள், உட்கட்டமைப்பு வசதிகள், புலமைப்பரிசில், சுயதொழில் மற்றும் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுத்தல் போன்ற நலன்புரி திட்டங்களை முன்னெடுத்தமைக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது நன்றியை இந்த தொலைபேசி உரையாடலின்போது செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் வாழும் மலையக தமிழ் மக்களின் நிலைமைகள் குரித்தும் அவர் உரையாடியுள்ளார்.

Tue, 08/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை