போலி ஆவண தயாரிப்பு நிலையம் முற்றுகை

பொலிஸ் அதிரடி; இருவர் கைது

கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் போலி ஆவணங்களை தயாரித்த ஒருவரும் அவருக்கு உதவிய மேலும் இருவரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, பொரளை பொலிஸ் பிரிவில் செவ்வாய்க்கிழமை (25) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் அவற்றை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் ஒருவரும் போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு உதவிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து அச்சு இயந்திரம், ஸ்கேன் இயந்திரம், முத்திரை உபகரணம், போலியான அத்தியாவசிய சேவை முத்திரைகளைகளுக்காக வைக்கப்பட்டிருந்த 100 ரோனியோ கடதாசிகள், போலி இறப்பர் முத்திரை, வெவ்வேறு மாவட்ட செயலகங்களினால் வழங்கப்படுவதை ஒத்த போலியான 12 அத்தியாவசிய சேவைக்கான அனுமதிப்பத்திரங்கள், 2 கையடக்க தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29, 30 மற்றும் 46 வயதுடைய தெமட்டகொட, வெள்ளவத்தை மற்றும் ஆட்டுப்பட்டித்தெரு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். பொரளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

​கொழும்பு வடக்கு நிருபர்

Thu, 08/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை