தொற்றாளர் எண்ணிக்கையை குறைப்பதே அவசரமான தேவை

ஜனாதிபதிக்கு இலங்கை மருத்துவர் சங்கம் கடிதம்

கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கையை விரைவாகக் குறைக்க வேண்டிய அவசர தேவை காணப்படுகிறது. இதனை கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகளால் மட்டுமே அடைய முடியும் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்டோரே கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கக் கூடிய அதிக அபாயத்தில் உள்ளனர். எனவே பைசர், மொடர்னா மற்றும் அஸ்ட்ரசெனிகா ஆகிய தடுப்பூசிகள் வழங்கும் பணிகளில் இவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய கொவிட் அபாய நிலைமையை தெளிவுபடுத்தி இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

நாட்டில் கடந்த சில வாரங்களாக கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமை மற்றும் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெரிசலால் பொதுமக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Sat, 08/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை